மேய்ப்பன் எனக் காப்பாய் போற்றி (2ம் திருவிழா)

lor33d

கொம்பொடித்துப் பாரதத்தை தந்தாய் போற்றி
நம்பி நிற்கும் அன்பர் தமக்கருள்வாய் போற்றி
வம்பு வழக்கு வாராது காப்பாய் போற்றி
தும்பிமுகத்து ஐங்கரனே போற்றி போற்றி

தந்தை தாயொடும் வீதிவலம் வந்தாய் போற்றி
முந்தை வினை தீர்த்திடு மூசிகவாகனனே போற்றி
மந்தை யென தடம்மாறும் நம்மோர் வாழ்வை
வந்திருந்து மேய்ப்பன் எனக் காப்பாய் போற்றி போற்றி

கணபதியே கஜமுகனே காப்பாய் போற்றி
குணமுடையோர் குறை தீர்ப்பாய் போற்றி போற்றி
மணங்கமழும் மலர்மாலை அணிந்தாய் போற்றி
வணங்குவோரின் வல்வினைகள் களைவாய் போற்றி

சா.தணிகாசலபதி

Advertisement

Comments are closed.